கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-10-31 19:42 GMT

ராமநத்தம், 

ராமநத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமநத்தம் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராமநத்தத்தை சேர்ந்த பூபதி மகன் பருதி இளம்வழுதி(வயது 27), முத்துகிருஷ்ணன் மகன் பெரியசாமி(23), சவுந்தரராஜன் மகன் சந்திரன்(19), பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் வெற்றிச்செல்வன்(19) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 20 பாக்கெட் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்