பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-07 18:34 GMT

அன்னவாசல் அருகே சுந்தரம்பட்டி பகுதியில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாடியதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்ளிட்ட போலீசார் சுந்தரம்பட்டி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னைநகர் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சுந்தரம்பட்டி பகுதியை சேர்ந்த சித்திரைவேல் (வயது 38), செந்தில்குமார் (30), கார்த்திக் (25), வெள்ளைச்சாமி (45) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சூதாட்ட அட்டைகள், ரூ.520-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்