தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது

ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-12-17 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர்கள் மாயகிருஷ்ணன் (வயது 20), முத்துமாரியப்பன் (23). இவர்களுக்கு இடையே ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணை மாயகிருஷணன் திருமணம் செய்தார்.

இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். இதுதொடர்பாக முத்துமாரியப்பன் உள்பட 4 பேரை ஓட்டப்பிடாரம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

இந்த நிலையில் முத்துமாரியப்பனின் தந்தை கூலி தொழிலாளி எட்டப்பனை மாயகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், மாயகிருஷ்ணன், அவருடைய தந்தை முருகன் (51), கப்பிகுளத்தை சேர்ந்த ரவிராஜ் (40) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்