ெபரம்பலூர் மாவட்டத்தில் 39 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
ெபரம்பலூர் மாவட்டத்தில் 39 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் 79 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 39 பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் வெங்கலம், கவுல்பாளையம், கீழப்பெரம்பலூர், மருவத்தூர், மேலப்புலியூர், ஒகளூர், வேப்பந்தட்டை, கீழமாத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், லெப்பைக்குடிகாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி (சூப்பர் 30), நத்தகாடு, களரம்பட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. சுயநிதி பள்ளிகளில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சாரதா தேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வரிசைப்பட்டி சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம் எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் ஸ்ரீ ராகவேந்திரா மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அன்னை மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, ஒதியம் வான்புகழ் வள்ளுவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் பனிமலர் மேல்நிலைப்பள்ளி, உடும்பியம் ஈடன் கார்டன்ஸ் மேல்நிலைப்பள்ளி, ெநற்குணம் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பனிமலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் ஸ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமாந்துறை செயிண்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிறுவாச்சூர் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அயன்பேரையூர் லெப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அந்தூர் செயிண்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் செயிண்ட் பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உடும்பியம் ஈடன் கார்டன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
இதில் அரசு பள்ளிகள் 10, அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள் 2, சுயநிதி பள்ளிகள் 11, மெட்ரிக் பள்ளிகள் 16 ஆகியவை அடங்கும். 4 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று கூட 100 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை.