தேன்கனிக்கோட்டையில் எருதுவிடும் விழாகாளைகள் முட்டி 39 பேர் காயம்

Update: 2023-04-05 19:00 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டையில் பழமைவாய்ந்த சவுந்தர்யவல்லி சமேத பேட்டராய சாமி கோவில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதனை ஓசூர் மாநகர மேயர் சத்யா, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன் ஆகியோர் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தேன்கனிக்கோட்டை மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.

வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. அவற்றை இளைஞர்கள் அடக்கி அதன் கொம்பில் கட்டியிருந்ததை எடுத்தனர்.

காளைகள் முட்டி 39 பேர் காயம் அடைந்தனர். இதில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விழாவை காண 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்