காங்கயம் பகுதியில் 39 மி.மீ மழை பதிவு
காங்கயம் பகுதியில் 39 மி.மீ மழை பதிவு;
காங்கயம்,
காங்கயம் பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்து வந்தது. இதைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் லேசான தூறலுடன் தொடங்கிய மழையானது படிப்படியாக வேகமெடுத்து சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து இரவு முழுவதும் தூறல் போட்டுக் கொண்டே இருந்தது. இதனால் நேற்று பகல் நேரங்களில் காங்கயம் பகுதிகளில் இருந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை 6 மணி வரை காங்கயம் பகுதியில் 39 மில்லி மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.