38-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது பூஸ்டர் தடுப்பூசி வருகிற 30-ந் தேதி வரை மட்டுமே இலவசம் - பயன்பெற, கலெக்டர் வேண்டுகோள்
திருவள்ளூர் மாவடத்தில் 38-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி வருகிற 30-ந் தேதி வரை மட்டுமே இலவசம் என்பதால் முகாமை பயன்படுத்தி கொள்ள கலெக்டர் வேண்டினார்.;
தமிழகமெங்கும் 37-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 18-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 350 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பெற்று 1,400 பணியாளர்கள் மூலம் 40 ஆயிரம் நபர்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த 18 லட்சத்து 88 ஆயிரத்து 400 பேரில், இதுநாள் வரை நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களிலும், நாள்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களிடம் முதல் தவணையாக 18 லட்சத்து 3 ஆயிரத்து 973 பேர் (95.5%), 2-ம் தவணை 16 லட்சத்து 47 ஆயிரத்து 990 பேர் (87.3%) என மொத்தம் 34 லட்சத்து 51 ஆயிரத்து 963 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பூஸ்டர் தவணை தடுப்பூசி 18 வயதிற்கு மேல் 59 வயது வரை உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 75 நாட்களுக்கு (ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை) பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கிட வேண்டும் என்ற ஆணையின்படி இன்னும் 14 நாட்களே மீதம் உள்ளது.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், பெரிய வணிக வளாகங்கள், சிறு தொழில் கூடங்கள், உணவகங்கள் மற்றும் தொழில்நுட்பக்கூடங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 37-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.