370 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

370 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது;

Update: 2022-07-07 20:40 GMT

மேலூர்

மேலூர் அருகே கீழவளவு பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு படையினரும், கீழவளவு போலீசாரும் ரோந்து சென்றனர். கொங்கம்பட்டி விலக்கு அருகே ரோந்து செல்லும்போது 3 புகையிலை மூடைகளுடன் நின்று கொண்டிருந்த சிலரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகிலுள்ள கரிசல்பட்டியை சேர்ந்த பவுசன் (வயது 30) மற்றும் முகமது இப்ராகிம் ஆகிய இருவரும் போலீசாரிடம் சிக்கினர். அங்கு 3 மூடைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 370 கிலோ புகையிலை பொருட்களை கீழவளவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பவுசன் மற்றும் முகமதுஇப்ராகிம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்