சுற்றித்திரிந்த 37 நாய்கள் பிடிக்கப்பட்டன
பாபநாசம் பேரூராட்சியில் சுற்றித்திரிந்த 37 நாய்கள் பிடிக்கப்பட்டன
பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் உள்ள தெருக்களில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிந்தன. இந்த நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து விலங்குகள் நல தொண்டு நிறுவன செயலாளர் அன்பழகன், பாபநாசம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம், பாபநாசம் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் சுகாதார பணியாளர்கள் உதவியுடன் பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் சுற்றித்திரிந்த 37 நாய்கள் பிடிக்கப்பட்டன. பின்னர் கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான கருத்தடை மையத்திற்கு 37 நாய்களும் கொண்டு செல்லப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் செய்திருந்தார்.