வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 37 மி.மீ மழை
வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 37 மி.மீ மழை பெய்தது.
அந்தியூர்
அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தியூர், பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அந்தியூரை அடுத்த பா்கூர் மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 37 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. எனினும் அணைக்கு நீர்வரத்து இல்லை. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 21.19 அடியாக இருந்தது.