சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த 36 சிலிண்டர்கள் பறிமுதல்
சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த 36 சிலிண்டர்கள் பறிமுதல்
திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் வீட்டு உபயோக சிலிண்டர்களில் இருந்து சட்டவிரோதமாக பெரிய சிலிண்டர்களுக்கு எரிவாயு பாதுகாப்பற்ற முறையில் ஒரு வீட்டில் மாற்றப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வீட்டில் ஆய்வு செய்தபோது, சட்டவிரோதமாக பெரிய சிலிண்டர் 22, சிறிய சிலிண்டர் 10, வீட்டு உபயோக சிலிண்டர் 4 என மொத்தம் 36 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் 36 சிலிண்டர்களை பறிமுதல் செய்தார். ஆய்வின் போது வட்ட வழங்கல் அலுவலர் அலெக்சாண்டர், வசுமதி, வருவாய் ஆய்வாளர் முரளிதரன், கிராம நிர்வாக அலுவலர் கோ.சி.மணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.