பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் 5 பஸ் நிலையங்களுக்கு பயணிகள் செல்ல 340 சிறப்பு மாநகர பஸ்கள்

பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் 5 பஸ் நிலையங்களுக்கு பயணிகள் செல்ல 340 சிறப்பு மாநகர பஸ்கள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.;

Update: 2023-01-12 05:52 GMT

பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் வெளியூர்களுக்கு கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் (மெப்ஸ், ரெயில் நிலையம்), கே.கே.நகர் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 12-ந்தேதி (இன்று) முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த பஸ் நிலையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில், பயணிகளின் வசதிக்காக 340 சிறப்பு இணை மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு 127 பஸ்களும், தாம்பரம் பஸ் நிலையத்துக்கு 115 பஸ்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்துக்கு 57 பஸ்களும், கே.கே.நகர் பஸ் நிலையத்துக்கு 8 பஸ்களும், மாதவரம் பஸ் நிலையத்துக்கு 26 பஸ்களும், பாரிமுனை பஸ் நிலையத்துக்கு 7 பஸ்களும் என மொத்தம் 340 பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பொங்கல் திருநாளை முடிந்து, சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 18-ந்தேதி (புதன்கிழமை) மாலை மற்றும் இரவு நேரத்தில் 50 பஸ்களும், 18 மற்றும் 19-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 125 பஸ்களும் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்