தமிழகத்தில் 34 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணி- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் 34 ரெயில் நிலையங்களை மேமப்டுத்தும் பணியை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்

Update: 2024-02-25 16:32 GMT

சென்னை,

இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2-ம் கட்டமாக நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 554 ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி நாளை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். இதில், தெற்கு ரெயில்வேயின் கீழ் மொத்தம் 44 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்