திருவள்ளூர் மாவட்டத்தில் 34¼ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 34¼ லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.;

Update: 2023-01-06 12:38 GMT

இறுதி வாக்காளர் பட்டியல்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 01-01-2023 தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

34¼ லட்சம் வாக்காளர்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3,657 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 16 லட்சத்து 90 ஆயிரத்து 617 பேர், பெண் வாக்காளர்கள் 17 லட்சத்து 30 ஆயிரத்து 146 பேர், மாற்று பாலினத்தவர் 768 பேர் என மொத்தம் 34 லட்சத்து 21 ஆயிரத்து 531 பேர் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:-

கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 34 ஆயிரத்து 117, பெண்கள்- 1 லட்சத்து 40 ஆயிரத்து 572, மாற்று பாலினத்தவர்- 40 என மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரத்து 729 வாக்காளர்கள் உள்ளனர்.

பொன்னேரி தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 28 ஆயிரத்து 790, பெண்கள்- 1 லட்சத்து 35 ஆயிரத்து 17, மாற்று பாலினத்தவர் 36, மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 843 பேர்.

திருத்தணி தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 37 ஆயிரத்து 532, பெண்கள்- 1 லட்சத்து 42 ஆயிரத்து 740, மாற்று பாலினத்தவர்கள்- 34, மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 306 பேர்.

திருவள்ளூர் தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 28 ஆயிரத்து 593, பெண்கள்- 1 லட்சத்து 35 ஆயிரத்து 124, மாற்று பாலினத்தவர் 25, மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 742 பேர்.

பூந்தமல்லி தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 76 ஆயிரத்து 215, பெண்கள்- 1 லட்சத்து 83 ஆயிரத்து 17, மாற்று பாலினத்தவர்- 70, மொத்தம் 3 லட்சத்து 59 ஆயிரத்து 302 பேர்.

ஆவடி தொகுதியில் ஆண்கள்- 2 லட்சத்து 16 ஆயிரத்து 713, பெண்கள்- 2 லட்சத்து 21 ஆயிரத்து 220, மாற்று பாலினத்தவர்- 97, மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரத்து 30 பேர்.

மதுரவாயல் தொகுதியில் ஆண்கள்- 2 லட்சத்து 19 ஆயிரத்து 643, பெண்கள்- 2 லட்சத்து 16 ஆயிரத்து 482, மாற்று பாலினத்தவர் 131, மொத்தம் 4 லட்சத்து 36 ஆயிரத்து 256 பேர்.

அம்பத்தூர் தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 86 ஆயிரத்து 40, பெண்கள்- 1 லட்சத்து 86 ஆயிரத்து 458, மாற்று பாலினத்தவர்- 87, மொத்தம் 3 லட்சத்து 72 ஆயிரத்து 585 பேர்.

மாதவரம் தொகுதியில் ஆண்கள்- 2 லட்சத்து 22 ஆயிரத்து 280, பெண்கள்- 2 லட்சத்து 24 ஆயிரத்து 752, மாற்று பாலினத்தவர்- 108, மொத்தம் 4 லட்சத்து 47 ஆயிரத்து 140.

திருவெற்றியூர் தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 40 ஆயிரத்து 694, பெண்கள்- 1 லட்சத்து 44 ஆயிரத்து 764, மாற்று பாலினத்தவர்- 140, மொத்தம் 2 லட்சத்து 85ஆயிரத்து 598 பேர்.

ஆண்களை விட பெண்கள் அதிகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் அனைத்து அலுவலக வேலை நாட்களில் தாசில்தார் அலுவலகங்களில் படிவங்கள் அளிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், ஓட்டர் ஹெல்ப்லைன் ஆப் என்னும் செயலி மூலமாகவும், படிவங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பரமேஸ்வரி, தேர்தல் தனி தாசில்தார் உதயம் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்