தமிழக மீனவர்கள் 32 பேர் கைது... 5 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை...!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.;

Update: 2024-01-13 13:52 GMT

கோப்புப்படம் 

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 250 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களின் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரனைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்