இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் - 6 பேர் கைது
நாகை மாவட்டத்தில், 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
நாகை,
நாகை மாவட்டம், குரவப்புலம் ரெயில்வே கேட் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து 300 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது.
கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 60 லட்ச ரூபாய் என்பது தெரிய வந்தது.