300 வாழை மரங்கள் தீயில் கருகின

பொள்ளாச்சி அருகே 300 வாழை மரங்கள் தீயில் கருகின. அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-02-14 18:45 GMT

பொள்ளாச்சி அருகே 300 வாழை மரங்கள் தீயில் கருகின. அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

வாழை மரங்கள் சாகுபடி

பொள்ளாச்சி அருகே சேர்வகாரன்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கரில் கரூர் பூவன் வகையை சேர்ந்த வாழை மரங்கள் சாகுபடி செய்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென்று அந்த வாழைத் தோட்டத்தில் உள்ள வாழை மரங்களில் தீப்பிடித்தது. இதில் அங்கு காய்ந்து கிடந்த வாழை இலைகள் தீப்பிடித்து மளமள வென்று பற்றி எரிந்தது. இதில் பச்சையாக இருந்த வாழை மரங்களும் தீயில் எரிந்தன.

எரிந்து நாசம்

இதை அறிந்த முருகானந்தம் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தண் ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

ஆனாலும் அங்கிருந்த 300 வாழை மரங்கள் எரிந்து நாசமானது. யாராவது பீடி குடித்து விட்டு வீசியதால் தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இழப்பீடு வேண்டும்

இது குறித்து முருகானந்தம் கூறுகையில், சேர்வகாரன்பாளையத் தில் ஒரு ஏக்கரில் 700 வாழை மரங்கள் சாகுபடி செய்து உள்ளேன். அதில் திடீரென்று பிடித்ததில் 300 வாழை மரங்கள் கருகி விட்டன. மேலும் சொட்டு நீர் குழாய் உள்ளிட்ட உபகர ணங்களும் எரிந்து சேதமாகி விட்டன. அதை கணக்கிட்டு வேளாண்மை துறை அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்