கொள்ளிடத்தில் 30 மி.மீட்டர் மழை பதிவு
கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 30 மி.மீட்டர் மழை பதிவானது
தொடர் மழை காரணமாக கொள்ளிடம் பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் அறுவடை எந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வயல்களில் விவசாயிகள் உளுந்து பயிர் மற்றும் பருத்தி சாகுபடி பணியை தீவிரப்படுத்தி வந்தனர். தற்போது பெய்த மழையினால் உளுந்து மற்றும் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
திருக்கடையூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி அழுகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.