3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

வேலூரில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-17 17:31 GMT

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ரகுவரன் என்கிற ரோபோ (வயது 23) மற்றும் வேலூர் முள்ளிப்பாளையம் கே.கே.நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் (28). இவர்கள் இருவரும் கடந்த மாதம் திருட்டு வழக்கு ஒன்றில் விரிஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தபூண்டியை சேர்ந்த ராம்குமார் என்கிற ரெட் (23) காதல் தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய வழக்கில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ரகுவரன், சரண்ராஜ், ராம்குமார் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பல போலீஸ் நிலையங்களில் உள்ளன. 3 பேரும் தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதையடுத்து அதற்கான ஆணையின் நகலை ஜெயிலில் இருக்கும் 3 பேரிடமும் போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்