எழுமலை அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - 3 வாலிபர்கள் கைது
எழுமலை அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
எழுமலை
எழுமலை அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உண்டியல் உடைப்பு
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள உத்தப்புரத்தில் மாரியம்மன் கோவில், கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த 2 கோவில்களில் இருந்த உண்டியல்களை மர்ம நபர்கள் இரவில் கொள்ளையடித்து சென்றனர். காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் எழுமலை போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
3 பேர் கைது
இந்த நிலையில் எழுமலை அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் (வயது 19), நாகமணி (19), சின்னன் (19) என்பதும், இவர்கள் 3 பேரும் தான் 2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.4,500 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் கட்டிட வேலை பார்த்து வந்து உள்ளனர்.