தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில்

தொழிலாளி 3 ஆண்டு சிறையில் அடைப்பு;

Update: 2023-06-22 20:06 GMT

சங்ககிரி:-

தேவூர் அருகே வினோபாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 61). இவர், தனது நண்பருடன் சேர்ந்து இறைச்சி வறுத்து சாப்பிட்டதாக தெரிகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ரமேஷ், தகாத முறையில் பேசி தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். இந்த வழக்கு சங்ககிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.பாபு ரமேசுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்