சாதியை சொல்லி அவதூறாக பேசியவருக்கு 3 ஆண்டு ஜெயில்

சாத்தான்குளம் அருகே சாதியை சொல்லி அவதூறாக பேசியவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2022-05-20 16:28 GMT

தூத்துக்குடி:

சாத்தான்குளம் தாமரைமொழியை சேர்ந்தவர் முத்துவேல். எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 19.6.2019 அன்று சாத்தான்குளத்தில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தாராம். அப்போது அங்கு வந்த தட்டார்மடம்-திசையன்விளை ரோட்டை சேர்ந்த புரோக்கர் சண்முகநாதன் (வயது 60) என்பவர், முத்துவேலின் காலில் மிதித்து விட்டாராம். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் முத்துவேல் தட்டார்மடத்தில் உள்ள தனது எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சென்று விட்டாராம். இந்த நிலையில் அங்கு வந்த சண்முகநாதன், முத்துவேலை சாதியை கூறி அவதூறாக பேசி கொலை செய்ய முயன்றாராம்.

இதுகுறித்து சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி சிறப்பு அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனில்குமார், குற்றம் சாட்டப்பட்ட சண்முகநாதனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பூங்குமார் ஆஜர் ஆனார்.

Tags:    

மேலும் செய்திகள்