குடோனுக்கு மின்இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு ஜெயில்

குடோனுக்கு மின்இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு ஜெயில்.

Update: 2022-12-19 18:42 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் தவுட்டுப்பாளையம் மின்சாரவாரிய அலுவலகத்தில் இளநிலை என்ஜினீயராக பணியாற்றியவர் ராமலிங்கம். இவர் கடந்த 2005-ம் ஆண்டு, அந்த பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரிடம் அவருக்கு சொந்தமான குடோனுக்குக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட மின்சார வாரிய இளநிலை என்ஜினீயர் ராமலிங்கத்துக்கு 3 ஆண்டு ஜெயில், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்