ரூ.40 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை

மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து துறையூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-25 19:45 GMT

மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து துறையூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.40 லட்சம் மோசடி

துறையூைர அடுத்த புத்தனாம்பட்டியை சேர்ந்தவர் பிரபு. இவர் உள்பட 11 பேரிடம் கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி ் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டார்.

இது குறித்து பிரபு புலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தார். பின்னர் அவர் மீது துறையூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

3 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று நீதிபதி நர்மதா தேவி தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம்சாட்டப்பட்ட ரவிக்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்