கந்துவட்டி வழக்கில் 3 பெண்கள் கைது

கந்துவட்டி வழக்கில் 3 பெண்கள் கைது

Update: 2022-06-30 18:41 GMT

சிவகாசி

சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ரிசர்வ்லைன் பகுதியில் வசித்து வருபவர் வெங்டேஷ்வரன். இவரது மனைவி ஹேமா. இவர் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி பவித்ரா, பொன்னுச்சாமி மனைவி முத்துமாரி, துரைப்பாண்டி மனைவி லீலாவதி ஆகியோரிடம் வட்டிக்கு பணம் வங்கியதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரும் ஹேமாவிடம் தாங்கள் கொடுத்த பணத்துக்கு கந்துவட்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஹேமா சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி பவித்ரா(வயது 28), முத்துமாரி (47), லீலாவதி (47) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்