பெண்ணாடத்தில் கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் மோதி 3 இருசக்கர வாகனங்கள் சேதம் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

பெண்ணாடத்தில் கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் மோதி 3 இருசக்கர வாகனங்கள் சேதமானது. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2022-12-06 20:25 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே உள்ள துறையூரில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் அளவில் டிராக்டர் ஒன்று கரும்பு ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. பெண்ணாடம், அம்பேத்கர் நகர் மெயின் ரோட்டில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்(25), ரம்யா(47), எழுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த குருசாமி மகள் காயத்ரி(31) ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் 3 வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தன. இதைப்பார்த்து எங்கே வீட்டுக்குள் வந்து விடப்போகிறதோ என்று அச்சம் அடைந்து அருகில் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். விபத்து நிகழ்ந்ததும் டிராக்டர் டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெண்ணாடம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் விபத்துக்கு காரணமான டிராக்டரை பறிமுதல் செய்து தலைமறைவான டிரைவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்