ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3½ பவுன் சங்கிலி அபேஸ்

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3½ பவுன் சங்கிலி அபேஸ்

Update: 2022-07-12 16:58 GMT

திங்கள்சந்தை:

ஆளூர் அருகே உள்ள அரசர்கோணம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி ஸ்ரீமதி (வயது67). இவர் சம்பவத்தன்று திங்கள்சந்தையில் இருந்து கீழகட்டிமாங்கோடு பகுதிக்கு அரசு பஸ்சில் புறப்பட்டார். கீழகட்டிமாங்கோடு பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. அதை பஸ்சில் வைத்து யாரோ மர்ம நபர் அபேஸ் செய்ததாக ெதரிகிறது. இதுகுறித்து ஸ்ரீமதி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்