வியாபாரியை வெட்டி கவரிங் நகையை கொள்ளையடித்த 3 பேர் கைது

வியாபாரியை வெட்டி கவரிங் நகையை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-07-29 10:23 IST

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25). இவர், ஆவடி அடுத்த கவுரிபேட்டையில் வசித்து வருகிறார். ஆவடி கோவில்பதாகை மசூதிக்கு பின்புறம் கவரிங் நகை கடை வைத்து உள்ளார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 3 பேர் திடீரென அசோக்குமார் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு கடையில் இருந்த கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் தலையில் 9 தையல் போடப்பட்டது.

இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த விஜய் (24), அருண்குமார் (25), பட்டாபிராம் பாபு நகரை சேர்ந்த சரத்குமார் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்