தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்;
சேலம் அம்மாப்பேட்டை பச்சப்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய வீடு முன்பு 3 பேர் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்களிடம் சக்திவேல் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், சக்திவேலை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த தீனா (23), மதன்ராஜ் (19), தருண்ராஜ் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.