கஞ்சா வைத்திருந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா வைத்திருந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது;
தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
3 வாலிபர்கள்
தஞ்சை பில்லுக்கார தெருவை சேர்ந்தவர் ராபர்ட் மகன் ஆண்டனி (வயது 25). பட்டுக்கோட்டை தாலுகா சூரப்பள்ளம் நடுத்தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் கார்த்திகேயன் (26), மதுரை மாவட்டம் அனுப்பாண்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ஹரிமுருகன் (28). இவர்கள் 3 பேரும் கஞ்சா வியாபாரிகள் ஆவர்.
இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டத்தில் கைது
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் கும்பகோணம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகந்தி, குண்டர் சட்டத்தில் ஆண்டனி, கார்த்திகேயன், ஹரிமுருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.