லாட்டரி விற்ற 3 பேர் கைது

லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-26 19:00 GMT

 சாத்தூர்

சாத்தூர் நகர் சப்-இன்ஸ்பெக்டர்கள் அப்துல்காதர் மற்றும் இருக்கன்குடி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் சாத்தூர் நடராஜா தியேட்டர் ரோடு மற்றும் மேலக்காந்தி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநில லாட்டரி நம்பர் எழுதி விற்பனைக்காக வைத்திருந்த போது மாபுஜான் (63), வேலுச்சாமி (68) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த லாட்டரி விற்ற பணத்தை சாத்தூர் நகர் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல இருக்கன்குடி பஸ் ஸ்டாப் பகுதியில் வெளிமாநில லாட்டரி நம்பர் எழுதி விற்ற மாரிமுத்து (46) என்பவரை போலீசார் கைது செய்து, லாட்டரி விற்ற பணம், விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை இருக்கன்குடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்