புகையிலை பொருட்களை கடத்திய 3 பேர் கைது
புகையிலை பொருட்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அழகாபுரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி ேசாதனை செய்தனர் அதில் 4 மூடைகளில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பூரை சேர்ந்த மணி (வயது 40), சின்னமனூரை சேர்ந்த சத்தியா (35), முகமது ஆதாம் (25) என்பதும் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நத்தம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.