புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷர்புதீன் (வயது 38). இவர் பெட்டிக்கடையில் வைத்து தடைசெய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். அவரை வேலூர் தெற்கு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள், பான்மசாலாவை பறிமுதல் செய்தார்.
இதேபோல் மேல்மொணவூரில் கோபால் (வயது 44) என்பவர் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். அவரை விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன், கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.
மேலும், விருதம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது காங்கேயநல்லூரை சேர்ந்த உதயகுமார் (39) பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் எச்சரித்து பின்னர் விடுவித்தனர்.