புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-08-25 19:30 GMT

மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குறிச்சி மெயின்ரோட்டில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடையில் இருந்து 1 கிலோ 350 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கடையின் உரிமையாளர் குலவணிகர்புரத்தை சேர்ந்த முத்து (வயது 42) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதேபோல் குலவணிகர்புரம் பகுதியில் உள்ள டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக கடையின் உரிமையாளர் நேசக்குமார் (46) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது கடையில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாளையங்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது வடக்கு பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக கடையின் உரிமையாளர் வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த சுப்பிரமணியன் (29) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்