மதுபானம் விற்ற 3 பேர் கைது

கடமலைக்குண்டு பகுதியில் மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-09-17 18:45 GMT

கடமலைக்குண்டு போலீசார் நேற்று கரட்டுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரட்டுப்பட்டி டாஸ்மாக் கடை அருகே நின்று மதுபானம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ராமர் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், தும்மக்குண்டு வைகை ஆற்று பாலம் அருகே மதுபானம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த மாயி (55), சிங்கராஜபுரம் சுடுகாடு அருகே மது விற்ற அதே கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் (44) ஆகிய 2 பேரையும் வருசநாடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்