தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலத்தூர் காட்டுப் பகுதியில் சேப்ளாபட்டி மேலமேடு பகுதியை சேர்ந்த முருகன் (வயது 66), கல்லடை தெற்கு தெருவை சேர்ந்த முத்துச்சாமி (65) தனது வீட்டின் பின்புறத்திலும், கவுண்டம்பட்டியை சேர்ந்த பழனியம்மாள் (36) தனது வீட்டின் பின்புறத்திலும் மது விற்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து முருகன், முத்துச்சாமி, பழனியம்மாள் ஆகிய 3 பேரையும் தோகைமலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.