விராலிமலை ஒன்றியம், மாத்தூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளவர் மூர்த்தி (வயது 37). இவரது பெட்டிக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி உள்ளிட்ட போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது மூர்த்தி அவரது பெட்டிக்கடையில் வைத்து மது பாட்டிலை விற்பனை செய்து தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கந்தர்வகோட்டை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலாடிபட்டியில் மதுவிற்ற உரியம்பட்டியை சேர்ந்த தங்கையன் மகன்கள் வரதராஜ் (வயது 27), முனியராஜ் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 44 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.