அன்னவாசல்:
இலுப்பூர் பகுதியில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக மாவட்ட சிறப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் இலுப்பூர் சுற்றுவட்டார பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இலுப்பூர் மேலப்பட்டி மற்றும் கட்டக்குடி டாஸ்மாக் கடை பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட விளாப்பட்டியை சேர்ந்த பெரியசாமி (வயது 42), சீத்தப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (33), தளிஞ்சியை சேர்ந்த கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 95 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.