தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது
தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் சலவன்பேட்டை திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 30), மாட்டுவண்டி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோட்டை பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென சரவணனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்து சென்றனர்.
இதுகுறித்து அவர் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில், சரவணனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (19), கோட்டை பின்புறம் உள்ள நவநீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிலம்பரசன் (34) மற்றும் 17 வயது சிறுவன் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.