ஓட்டல், கடைகளில் மது ஊற்றிக்கொடுத்த 3 பேர் கைது

ஓட்டல், கடைகளில் மது ஊற்றிக்கொடுத்த 3 பேர் கைது

Update: 2023-06-09 20:26 GMT

திருவட்டார்:

திருவட்டார் மீன்சந்தை அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் இருந்து சற்று தொலைவில் ஒரு பார் செயல்பட்டு வந்தது. இந்த பார் அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததால் சமீபத்தில் மூடப்பட்டது.

அதன்பின்பு மதுபிரியர்கள் மது குடிக்க போதிய இடமின்றி திணறினர். சிலர் மூடப்பட்ட பாரின் பின் பகுதியில் ஆற்றின் கரையோரம் உரக்கிடங்கில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.

இந்தநிலையில சிலர் அருகில் உள்ள ஓட்டல், காய்கறிக்கடைகளில் சென்று மது பாட்டிலை திறந்து மதுகுடிக்க தொடங்கினர். கடை உரிமையாளர்களும் மது குடிக்க வருகிறவர்கள் தங்கள் கடையில் சாப்பிட ஏதாவது வாங்குவர்கள் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு மது ஊற்றி கொடுக்க தொடங்கினர். இதுதொடர்பாக திருவட்டார் போலீசுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சந்தைப்பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் உள்ள கடைகளை கண்காணிக்க தொடங்கினர். அப்போது பாய்க்காடு பகுதியை சேர்ந்த ஜாண் (வயது53) என்பவர் தனது ஓட்டலிலும், அணைக்கரையை சேர்ந்த தங்கசுவாமி (49), காங்கரைப்பிலாவிளையைச் சேர்ந்த ரவி (54) ஆகியோர் தங்கள் காய்கறிக்கடையிலும் மதுப்பிரியர்களுக்கு மதுவை கப்பில் ஊற்றிக்கொடுப்பதை பார்த்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்