அனுமதியின்றி பட்டாசு திரி வைத்திருந்த 3 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு திரி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சிவகாசி,
சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் மொய்தீன் அப்துல்காதர் மற்றும் போலீசார் பெரியார்காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு தகர செட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் திரிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஜெகதீஸ்வரன் (வயது22) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (53) என்பவர் அனுமதியின்றி பட்டாசு திரிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய போலீசார், ஈஸ்வரனை கைது செய்தனர். எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்த ராஜா மனைவி செல்வி (38) என்பவர் உரிய அனுமதியின்றி பட்டாசு திரிகளை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர்.