கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது

கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-05-29 19:11 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை டவுன் சொக்கலிங்கபுரம் பகுதிகளில் பட்டாசு கருந்திரி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் உமா மாலினி தலைமையிலான போலீசார் சொக்கலிங்கபுரம் பகுதியில் வீடு, வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சதுரகிரி (வயது 63), மல்லையன் (59) ஆகியோரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அதேபோல டவுன் சப் -இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து தலைமையிலான போலீசார் எம்.டி.ஆர். நகர் பகுதியில் வீட்டின் முன்பு அனுமதியின்றி கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்த பாண்டியராஜன் (59) என்பவரிடம்இருந்து 50 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்