பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-05-23 19:55 GMT

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே பிரியம்மாள்புரம் ஊருக்கு கீழ்புறம் உள்ள கால்வாய் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். மற்ற 6 பேர் ஓடிவிட்டனர். அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்