பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்.
திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் காடியார் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக மேமாலூர் கிராமத்தை சேர்ந்த சவுரிமுத்து மகன் தைரியராஜ் (வயது 32), கண்ணாயிரம் மகன் கோவிந்தன் (62) மற்றும் லூர்துசாமி மகன் ஆரோக்கிய பிரான்சிஸ் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.