பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-21 20:18 GMT

திருச்சி உய்யகொண்டான்திருமலை எம்.எம்.நகர் பகுதி அருகே விபசாரம் நடப்பதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக நொச்சியத்தை சேர்ந்த பத்ரிநாதன் (வயது 30), சுப்பிரமணியபுரம் சேஷாத்திரிபுரத்தை சேர்ந்த சுரேஷ் (42), உறையூர் காவேரிநகரை சேர்ந்த மணிகண்டன் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மடிக்கணினி, 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்