வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது

சூலூர் அருகே வீடு புகுந்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-18 21:15 GMT

சூலூர் அருகே வீடு புகுந்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீடு புகுந்து திருட்டு

கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் தங்கராஜ் (வயது31). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொழில் காரணமாக வெளியே சென்றார். அவருடைய மனைவி தனது அக்காவை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சோமனூருக்கு சென்றார்.

அப்போது பட்டப்பகலில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.

அவர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, கம்மல், அறையில் மாட்டி இருந்த 50 இன்ச் டி.வி., மடிக்கணினி ஆகியவற்றை திருடி விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து தங்கராஜ், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி ஆதாரங்களுடன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையின் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

3 பேர் கைது

அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தங்கராஜின் வீட்டிற்கு அருகே கட்டுமான நிறுவ னத்தில் பணியாற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த கணேசன் (25), அவரது தம்பி தினேஷ் (23), திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி (27) என்பதும், அவர்கள், தங்கராஜின் வீடு புகுந்து திருடியதும் தெரியவந்தது.

உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கராஜ் வீட்டில் திருடி சென்ற டிவி, மடிக்கணினி, தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்