பட்டாசுகளை பதுக்கி வைத்த பெண் உள்பட 3 பேர் கைது

சிவகாசி பகுதிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-06-21 19:54 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டாசு பறிமுதல்

சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் பேராபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முட்புதரில் உரிய அனுமதியின்றி பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் மீனம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது 57), கலைச்செல்வன் (25) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

பெண் கைது

இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் மொய்தீன் அப்துல் காதர் மீனம்பட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு ஒரு தகர செட்டில் பட்டாசுகளை உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து மீனம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த அந்தோணியம்மாள் (60) என்பவரை போலீசார் கைது செய்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்