பெண் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.;
திருவண்ணாமலை தாலுகா சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரின் மனைவி நிர்மலா (வயது 34). இவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் செய்யாறு தாலுகா புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (39) என்பவரும் திருவண்ணாமலையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போளூர் டவுன் வி.எஸ். பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை (47) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போது போளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் 3 பேரும் தொடர்ந்து சட்ட விரோத செயலில் ஈடுபடுவதை தடுக்க அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் நிர்மலா, விஜயகுமார், ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.