17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது

17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது;

Update: 2023-08-14 19:48 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீர், சப்-இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாரத் கல்லூரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் வேகமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சையை அடுத்த சென்னம்பட்டி காலனி தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் சரண் (வயது 19), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி கம்மாக்கரையை சேர்ந்த சிதம்பரம் மகன் பன்னீர்செல்வம் (20), தஞ்சை பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் திருடிக்கொண்டு வந்தது என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தஞ்சையில் வெவ்வேறு இடங்களில் திருடிய 3 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்