முயல் வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம்

கடையம் அருகே முயல் வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.;

Update: 2023-01-20 18:45 GMT

கடையம்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சிவநாடானூர் மற்றும் அழகம்பெருமாள் நாடானூர் ஆகிய கிராம பகுதிகளில் முயல் வேட்டையாடுவதாக கடையம் வனச்சரக அலுவலர் கருணாமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனவர் முருகேசன் தலைமையில் வனக்காப்பாளர் ரமேஷ் பாபு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிவநாடனூரை சேர்ந்த ரெங்காசாமி மகன் அருண் ராஜ் மற்றும் ஆனந்த், சின்னநாடானூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த தேனையா மகன் மாரியப்பன் ஆகிய 3 பேரும் முயல் வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அம்பை துணை கோட்ட இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில் 3 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்